ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு உள்பட்ட இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ வெங்காயம் 180 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையில் வெங்காய உயர்வு அரசியல் தளத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வெங்காயம் தொடர்பான் கேள்விக்கு, "நான் வெங்காயமும் பூண்டும் அதிகமாக சாப்பிடுவதில்லை. வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் சாப்பிடாத குடும்பத்தில் இருந்து வந்தவள் நான்" என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதேபோல் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ப.சிதம்பரத்தை வரவேற்பதற்கு வெங்காய மாலையுன் அவர் தொடண்டர்கள் சென்றது அனைவரையும் உற்றுநோக்க வைத்தது. அதுமட்டும் இல்லாமல் திருடர்கள் பணத்தை திருடாமல் வெங்காயத்தை திருடிச் சென்றது, கல்யாண வீட்டிற்கு வெங்காய போக்கே கொண்டு சென்றது என தற்போதைய ஹாட் டாப்பி்க்காக வெங்காயம் உள்ளது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.170 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ முதல்தர வெங்காயம் தற்போது ரூ.40 வரை குறைந்து ரூ.130 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. அதேபோல், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.