நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து 170 சவரன் தங்கநகை ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் கிரகலட்சுமியின் வீடு உள்ளது. தற்போது அடையாறில் வசித்து வரும் அவர், தி.நகரில் உள்ள வீட்டில் வாரம் ஒருமுறை வந்து தங்கிவிட்டு செல்வது வழக்கமாம். அதன்படி இன்று காலை 7 மணிக்கு தி.நகர் இல்லத்திற்கு வந்த கிரகலட்சுமி, வீட்டின் கதவு, ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவரது தங்கையை அனுப்பி பார்த்த போது 170 சவரன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கபணமும் களவு போனது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.