Skip to main content

ஒ.என்.ஜி.சிக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓ.என்.ஜி.சி.நிறுவனத்துக்கு எதிராக மனு கொடுக்க வந்த மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது, பிறகு வெளியில் வந்து மக்களை நேரடியாக சந்தித்த மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொள்வதாக உறுதி அளித்தால் மக்கள் கலைந்து சென்றனர்.
 

காவிரி டெல்டா பகுதி முழுவதும் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதற்கு டெல்டா விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து  ஓ.என்.ஜி.சி நிறுவனம் மேற்கொண்டுள்ள திட்டப்பணிகளை எதிர்த்து காவிரி டெல்டா மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ONGC COMPANY AGAINST PEOPLES HAS PETITION GIVE TO COLLECTOR

இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள சோழங்கநல்லூர் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக எண்ணெய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறிய பொதுமக்கள் இன்று மீண்டும் 50- க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பெரும் கூச்சல் ஏற்பட்டது. பிறகு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் நேரடியாக வந்து மக்களை சந்தித்தார்.
 

அப்போது மக்கள், "ஓஎன்ஜிசி நிறுவனம் இரவு நேரங்களில் ராட்சச இயந்திரங்களை கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் அதிக இரைச்சல் காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் தூக்கம் இன்றி அவதிப்படுகின்றனர். மேலும் விவசாய நிலங்களில் சாலைகள் அமைத்துள்ளனர். இதனால் மழை நீர் வடிய வழியில்லாமல் தேங்கி சாக்கடையாக உருவெடுத்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. அதன் காரணமாக மர்மக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவித்தன.  மக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் ஆனந்த் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொள்வதாக உறுதி அளித்த பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.
 

சார்ந்த செய்திகள்