Skip to main content

ஒரு லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு முன்னாள் அமைச்சர் நிவாரண உதவி! 

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

கரோனா வைரஸ் பீதியால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அரசு, எதிர்க்கட்சிகள் உள்பட சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த  நிவாரண உதவி பொருட்களை தமிழகம் முழுவதும் உள்ள பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். 
 


அதுபோல் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் தனது தொகுதியில் உள்ள நத்தம் மற்றும் சாணார்பட்டி யூனியனில்  உள்ள 58 பஞ்சாயத்துகளில் இருக்கக் கூடிய  தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்களான முகக்கவசம், கிருமிநாசினி, சோப்பு, கையுறை வழங்கியதுடன் மட்டும்மல்லாமல் 25 கிலோ  அரிசியுடன் மளிகைப் பொருட்களும் வழங்கினார். 
 

அதைத் தொடர்ந்து தொகுதி மக்களுக்காக ஒரு லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு தலா ஐந்து கிலோ அரிசி கொடுக்க முடிவு செய்தார். அதன் அடிப்படையில்  நத்தம், சாணார்பட்டி மற்றும் திண்டுக்கல் யூனியனில் உள்ள நான்கு பஞ்சாயத்து  உள்பட 58 பஞ்சாயத்துகளில் இருக்கக் கூடிய கட்சி பொறுப்பாளர்கள் மூலம் கணக்கு எடுக்கப்பட்டு ஒரு குடும்பத்திற்கு ரேசன் கார்டு வாரியாக முன் கூட்டியே அந்தந்த பகுதிகளில் டோக்கன் கொடுத்து இருந்தனர். அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதனும் ஒவ்வொரு ஊராட்சியாகச் சென்று அந்த ஊராட்சிக்குக் கட்டுப்பட்டுள்ள ஒரு பொது இடத்துக்கு மக்களை வரச்சொல்லி தலா ஐந்து கிலோ அரிசி வீதம் வழங்கினார். தொகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு கரோனா நிவாரண உதவியாக ஒரு லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு அரிசி வழங்கினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்