Skip to main content

ஓஎல்எக்ஸ்ஸில் விளம்பரம்... பைக்குடன் ''டாடா'' காட்டியவர் கைது!!

Published on 27/10/2018 | Edited on 27/10/2018

சென்னையில் ஓஎல்எக்ஸ் மூலம் இருசக்கர வாகனம் வாங்குவதாக கூறி நேரில் சந்தித்து வாகனத்தை ஓட்டிப்பார்ப்பதாக கூறி வாகனத்துடன் டாடா காட்டி விட்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

police arrest the bike robber

 

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த வாலிபர் அப்துல். இவர் தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றை ஓஎல்எக்ஸ் எனும் இணையதளத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான விளம்பரத்தை அதில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர்தான் அந்த இருசக்கர வாகனத்தை வாங்க ஆசைப்படுவதாக அப்துலுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கூறியுள்ளார்.

 

police arrest the bike robber

 

இதனை நம்பி ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அருகில் அப்துல் சென்றுள்ளார். அதே இடத்திற்கு ஆட்டோவில் வந்த அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தின் ஆர்.சி புக் உட்பட அனைத்தையும் சோதிப்பது போன்று செய்துவிட்டு. வாகனத்தை ஓட்டி பார்க்க விரும்புவதாக கூறி பைக்கை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார். இதுகுறித்து அப்துல் ஏழுகிணறு போலீசாரிடம் புகாரளிக்க இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.

 

police arrest the bike robber

 

 

police arrest the bike robber

 

இந்த விசாரணையில் அந்த நபர் ராயபுரம் ஆட்டோவில் வந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து அவன் இலங்கையை சேர்ந்த நிரோஷன் என்பதும் இதேபோல் பல இருக்கசக்கர வாகனங்களை திருடியன் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நிரோஷனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

   

சார்ந்த செய்திகள்

Next Story

பைக் மீது தீராத காதல்-15 பைக்குகளை திருடிய சிறுவன் கைது

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Unrequited love for bikes-17-year-old boy arrested for stealing many bikes

17 வயதில் எண்ணற்ற வண்டிகளை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேலையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ஆர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதாகும் ஆர்யா பன்னிரண்டாம் வகுப்பு பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட சிறுவன் என்றுகூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சூர்யா போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான். சில மாதங்களாக அங்கு இருந்தவன் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கடலூர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து ரிலீஸ் ஆனான். வெளியே வந்தவன் மீண்டும் பைக் திருட்டில் ஈடுப்பட்டுள்ளான். கடலூர், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் மூன்று வண்டிகளையும் திருவண்ணாமலையில் 15 வண்டிகளும்  திருடியதாக தெரிய வருகிறது.

மார்ச் 7 ஆம் தேதி காலை 7 மணி அளவில் குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்பரசு தலைமையில் திருவண்ணாமலை தண்டராம்பட்டு ரோடு அங்காளம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நிலையில் அழைத்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளான்.

தொடர் விசாரணையில் பைக் திருடன் என்பது தெரிய வந்த நிலையில் திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டான். இந்த சிறுவனுக்கு பைக் மீது தீராத காதல் இருந்துள்ளது. திருடிச் செல்லும் பைக்கை விற்பனை செய்யாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்துள்ளான். அவன் விருப்பப்படும் போது மட்டும் விரும்பிய பைக்கை எடுத்து ஓட்டிவிட்டு மீண்டும் பாதுகாப்பாக தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு இருந்துள்ளான். இந்த தகவலை அவன் சொன்னதும் போலீசார் ஆச்சரியமடைந்துள்ளனர். அவன் திருடிய 15 பைக்குகளை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். பைக் திருடு போனதாக புகார் தந்தவர்களை வரவைத்து ஆவணங்களை சரிபார்த்து அந்த பைக் ஒப்படைக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

வழக்கமாக பைக் திருடுபவர்கள் உடனடியாக அதனை வேறு ஒருவருக்கு விற்பதும் இல்லையென்றால் ஸ்பேர் பார்ட்ஸ்களை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்பதை தான் இதுவரை காவல்துறையினர் கேள்வி பட்டுள்ளனர். ஆனால் பைக் மீது கொண்ட காதலால் விரும்பிய பைக் திருடிக் கொண்டு போய் வீட்டிலேயே பத்திரமாக வைத்து அதை சுத்தம் செய்து பளபளப்பாக வைத்துக் கொண்டிருப்பவனை நினைத்து காவல்துறையினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.