கரோனா ஊரடங்கு காலத்தில் மனிதர்கள் வீடுகளில் முடங்கியதால் விலங்குகள் காட்டை விட்டு வெளியே வருவது போல, விஷ உயிரிகளும் புதர்களை விட்டு மனிதர்கள் வாழும் வசிப்பிடம் நோக்கி வரத்தொடங்கி விட்டது. அப்படித்தான் இந்த சம்பவம்,
ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியில் வசிப்பவர் பட்டறை ராஜா. இவர் இன்று காலை தனது வீட்டிலுள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றார். அப்போது அந்த குளியலறையில் இருந்து ஏதோ ஒரு வினோதமான சத்தம் ஒன்று கேட்டுள்ளது. பட்டறை ராஜா சத்தம் வந்தப் பகுதியை பார்த்தபோது பெரிய பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நி
இதுகுறித்து அலுவலர் மயில்ராஜ் கூறும்போது, தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாம்புகள் குளிர்ச்சியான இடங்களை தேடி செல்லும். இதனால் சில நேரங்களில் குடியிருப்புக்குள் புகுந்து குளியல் அறை உள்பட குளிர்ச்சியான பகுதியில் சென்று விடுகிறது. பொதுமக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும். வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் பழைய பொருட்களை சேகரித்து வைக்காமல் வீட்டிலிருந்து வெளியே எடுத்துவிடவேண்டும். சாலையோரம் மண் பகுதியையொட்டியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் குளியலறை, சமையலறை, குளிர்சாதன வசதி உள்ள படுக்கையறைகளை தூய்மையாக வைத்து, மிகவும் கண்காணிப்போடு இருக்க வேண்டும். ஏனென்றால் பாம்புகள் பதுங்கிக் கொள்ள இவைகள் வசதியான இடம் என்றார்.