தற்போது தேர்தல் வருவது நல்லதல்ல: தமிழிசை செளந்தர்ராஜன்
தற்போது தேர்தல் வருவது நல்லதல்ல, எந்த நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு தெரியும் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மத்திய அரசையும், ஆளுநரையும் குறை கூறுவதிலேயே இருக்கிறார். இல்லாத இந்தி திணிப்பிற்கு எதிராகவே அவர் பேசி வருகிறார். தற்போது தேர்தல் வருவது நல்லதல்ல. அரசுக்கு போதிய கால அவகாசம் தர வேண்டும். எந்த நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.