Published on 22/04/2022 | Edited on 22/04/2022

நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினமாக இனி கடைபிடிக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
விதி எண் 110இன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடைசியாக 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட்டதாகவும், இனி ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும் எனப் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சி அமைக்கும் போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.