Skip to main content

வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்.! நிர்க்கதியில் 100க்கும் அதிகமான குடும்பங்கள்!

Published on 06/09/2018 | Edited on 06/09/2018
sr


     ஸ்ரீவைகுண்டம் அணையின்  வடகால்வாய் கரையில், நீர்ப்பிடிப்புப் பகுதியில் கட்டப்பட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை காலிசெய்யக்கோரி வருவாய்த்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளதால் பொதுமக்கள் கவலையுடன் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

sr

 

  தூத்துக்குடி மாவட்டம்  தாமிரபரணி ஆற்றின் கடைசி அணையாக ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டின் வடக்கு கால்வாய் பகுதியின் கரையோரம் சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்தில் ஏரல் உள்ளது. இதன் இடைப்பட்ட பகுதியில் கால்வாய் கரையோரம் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு அண்ணாநகர், சாமிபுரம், மருத்துவர்காலனி, மகராஜாபுரம், கடையம்புதூர் என உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான குடுமபத்தினர் வசித்து வருகின்றனர். நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதாக கடந்த 28ம் தேதி வருவாய்த்துறையினர் அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.  விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்ற உள்ளதாகவும்,  மின்சாரம் இணைப்பும்  துண்டிக்கப்படும் எனவும் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். தற்பொழுது இரண்டாவது தடவையாக நோட்டீஸ் வருவாய்த்துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.

 

    சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக 4 தலைமுறையாக வீடு கட்டி வசித்து வருவதாக கிராம மக்கள் தங்கள் வீடுகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால்,ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது. இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாட்களாக சிக்கித் தவித்த ரயில் பயணிகள் மீட்பு!

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Rescue of stranded train passengers for 3 days

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து நேற்று முன்தினம் சென்னை எழும்பூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அப்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான இரயில்வே பாலம் முழுவதும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாகச் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ரயிலில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதியடைந்தனர். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

அதே சமயம் ரயிலில் உள்ள பயணிகளை மீட்கும் பணி குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலமாக ஆய்வு செய்தார். அப்போது தொலைப்பேசி வாயிலாக அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார். நிலைமையை ஆய்வு செய்து, மீட்புப் பணியை துரிதப்படுத்த தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். அப்போது மத்திய இணையமைச்சர் எல். முருகனும் உடன் இருந்தார்.

இந்நிலையில் வெள்ளத்தால் 3 நாட்கள் ரயிலில் சிக்கியிருந்த ரயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். 6 பேருந்துகள் மூலம் 400க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பாதிக்கப்பட்ட ரயில் பயணிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து மற்றொரு ரயில் மூலம் பயணிகள் மதுரை செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 

Next Story

சிக்கித் தவிக்கும் ரயில் பயணிகள்; மத்திய அமைச்சர் ஆய்வு

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
rain passengers issue Union minister review

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து நேற்று முன்தினம் சென்னை எழும்பூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அப்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான இரயில்வே பாலம் முழுவதும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாகச் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயிலில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதியடைந்தனர். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் மீதமுள்ள பயணிகளுக்கு உணவு வழங்க மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்ற நிலையில் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

இரண்டு டன் உணவு, தண்ணீருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு வழங்க முடியாத சூழலும் ஏற்பட்டது. இதனால் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள பயணிகளை மீட்க முடியாமல் திரும்பிச் சென்றது. ரயில் நிலையத்தில் ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ள நிலையில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் மூன்றாவது நாளாகப் பயணிகள் தவித்து வருகின்றனர். தொடர்ந்து பயணிகளை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

rain passengers issue Union minister review

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கித் தவிக்கும் ரயிலில் உள்ள பயணிகளை மீட்கும் பணி குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலமாக ஆய்வு செய்தார். மேலும் தொலைபேசி வாயிலாக அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார். நிலைமையை ஆய்வு செய்து, மீட்புப் பணியை துரிதப்படுத்த தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது மத்திய இணையமைச்சர் எல். முருகனும் உடன் இருந்தார்.