இந்தியா முழுவதும் இன்று ஜனவரி 26ந்தேதி குடியரசு தினம் என்பதால் அரசு பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும்முள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறை விடப்படவேண்டும் என்பது கட்டாயம். அந்த விதிப்படி நாட்டில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் விடுமுறை விட்டுள்ளன, சில தொழிற்சாலைகள் மட்டும் அரசின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தொழிற்சாலையை இயக்கிவந்தன.
அப்படி விடுமுறை நாளான இன்று ஜனவரி 26ந்தேதி வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் காந்தி ரோடு பகுதியில் தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது அதையும் மீறி வேலைக்கு தொழிலாளர்களை வரவழைத்து வேலை செய்து வந்தனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமல் தொழிற்சாலையை இயக்குவது சரியா என தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர்.
தொழிற்சாலை நிர்வாகம் நாங்க அப்படித்தான் செய்வோம் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மக்கள் கோபமாக பின்னர் விடுமுறை அளிக்கிறோம் எனச்சொல்லி தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த தொழிற்சாலை அமைந்துள்ள பகுதி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபிலின் தொகுதிக்கு உட்பட்டது, அவரது வீடு உள்ள பகுதிக்கு அருகில் உள்ள பகுதியில் இயங்கும் தொழிற்சாலையே விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை வேலைக்கு வரவைத்துள்ளது. அமைச்சரின் ஊரிலேயே, அந்த தொழிற்சாலை தில்லாக செயல்பட்டதுக்கான காரணம், அமைச்சரின் பண வெறி. மாதாமாதம் அதிகாரிகள் மூலமாக மாமூல் வாங்குவதால், தங்கள் மீது எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கமாட்டார்கள் என்கிற நினைப்பிலேயே தொழிற்சாலையை இயக்கியுள்ளார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
நியாயமா, இது நியாயமா?