சென்னையில் நடைபெற்ற சுங்கத்துறை தேர்வில் வட மாநில இளைஞர்கள் 28 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பாரிமுனையில் சுங்கத்துறை ஓட்டுநர் மற்றும் கேண்டீன் அட்டெண்டர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து சுமார் 1600 பேர் இந்த தேர்வில் இன்று கலந்து கொண்டனர். அப்போது தேர்வு எழுதிக்கொண்டிருந்த வடமாநில இளைஞர்கள் சிலரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது 28 பேர் ப்ளூடூத் உதவியுடன் தேர்வில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்கள் கேள்விகளை சொல்ல வெளியில் இருந்து ஒருவர் கேள்விகளுக்கான பதில்களை தெரிவித்து வந்ததும் தெரியவந்தது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 28 வடமாநில இளைஞர்களும் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இனி அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்க முடியாத முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.