Published on 20/07/2021 | Edited on 20/07/2021
![jl](http://image.nakkheeran.in/cdn/farfuture/82xqG4rFT8ltXTuhGVAGOXCDd2LnslBIatHDsJXJQKc/1626804782/sites/default/files/inline-images/44_32.jpg)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நீதிமன்ற உத்தரவுப்படி விரைந்து நடத்தப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " உள்ளாட்சி தேர்தலை வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. எனவே தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்கியுள்ளது. மாநில தேர்தல் ஆணையமும் அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எந்த காரணத்தை முன்னிட்டும் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை" என்றார்.