Published on 24/11/2020 | Edited on 24/11/2020
![nivar cyclone cm palanisamy discussion with ministers and officers](http://image.nakkheeran.in/cdn/farfuture/kdHROLX5nzXa-V6dQQBy3vA518j9QyZeja1hPaQlquc/1606208677/sites/default/files/inline-images/cm4322.jpg)
'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும், புயல் தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த அதிகாரிகளும், பல்வேறு துறைச்சார்ந்த உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே, வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில் நிலைமையை தீவிரமாகக் கண்காணிக்க தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இரு மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் தேசிய அவசர நிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.