தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை நித்தியானந்தா விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும், தற்போது அவருடன் இரண்டு பெண் சீடர்களும், குஜராத்தில் புகார் கூறிய ஜனார்த்தன ஷர்மாவின் மூத்த மகளும், 30 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்களும் அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கென்று தனி 'வெப்சைட்' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க நித்தியானந்தா திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர். மேலும் அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் என அந்த நாட்டு அரசு உதவியுடன் இதெல்லாம் செய்ய போவதாக கூறுகின்றனர்.
ஆனால் போலீஸ் தரப்போ நித்தியானந்தா எந்த நாட்டிற்கும் செல்லவில்லை. அவர் இந்தியாவில் தான் இருக்கிறார். அதோடு அவர் வெளியிட்ட வீடியோக்கள் எல்லாம் இமயமலை பகுதிகளில் எடுத்தது என்றும் போலீஸ் தரப்பு கூறிவருகின்றனர். மேலும் விரைவில் நித்தியானந்தா கைது செய்யப்படுவார் என்றும் கூறுகின்றனர். இந்த நிலையில் இன்று நித்யானந்தா தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,கர்நாடகத்தில் பாஜக அரசு ஆதிசைவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அதேபோல் கம்யூனிஸ்டு இயக்கங்களும், பெரியார் திராவிட கழகத்தினரும் எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என கூறியுள்ளார். போலீஸார் தீவிரமாக தேடப்பட்டு வரும் நிலையில் தினந்தோறும் நித்தியானந்தா சர்ச்சைக்குரிய வகையில் வீடியோக்களை வெளியிட்டு கருத்து தெரிவித்து வருகிறார்.