நீலகிரி மாவட்டத்தில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் துறைசார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொணடனர்.
ஊட்டியில் 40 ஏக்கரில் ரூபாய் 447.32 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. நீலகிரியுடன் சேர்த்து மத்திய அரசு புதிதாக அனுமதி தந்த 11 கல்லூரிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.