![Night curfew in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/3qpGKF7tH-8Zzp7-QUv4ahRR94z-FvHQ8AMSNV07Fm8/1618939170/sites/default/files/2021-04/dgg.jpg)
![Night curfew in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/ARVAjeCT7bNxLJ19eh8K2WBBZ8HJnOTnChfo6Vqg5gQ/1618939170/sites/default/files/2021-04/dfyhdydf_0.jpg)
![Night curfew in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/DbgNS9QV_AfMAdmuyIlkfnB-vYC7LD5FBZGsY9YujuI/1618939170/sites/default/files/2021-04/fujrt.jpg)
![Night curfew in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/liRl_1kdmdy4rxppI9AKRA12LoMSiYKhN77JUuZHm-E/1618939170/sites/default/files/2021-04/gfhty.jpg)
![Night curfew in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/Z7Ic-eBWrRkqR5m-Hn8d6dq4kjoqQ02Td8EeFwcDCIY/1618939170/sites/default/files/2021-04/gfjtut.jpg)
![Night curfew in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/iq3MaR4-ybRm7zr9FKAsUBykRHrpWTCGKF7gcv51c4Y/1618939170/sites/default/files/2021-04/gfuju.jpg)
![Night curfew in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/6HKsUIUP4RC38nFhLLolhTT3toMdAUuQZ7vRxt8vJ8g/1618939170/sites/default/files/2021-04/xdgsg.jpg)
![Night curfew in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/EtyvYDtLHggqOERbCbKDknPmToiuQCQA6EE290I8AmA/1618939170/sites/default/files/2021-04/ytuiyt.jpg)
![Night curfew in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/Nyd4ctjz64_9_yhisbdWAfA34uImI2aN3PJ__BPgs2U/1618939170/sites/default/files/2021-04/ytuiytr.jpg)
![Night curfew in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/myGS_n5NNVNFSla_641IeeQDwORrWDf5i3dJw-LZDxw/1618939170/sites/default/files/2021-04/dfhgdh.jpg)
![Night curfew in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/tvbh3hVzjbpY11RHjtST4CSkla3Y3V1XafecFtUBFvo/1618939362/sites/default/files/2021-04/dfyye.jpg)
![Night curfew in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/NsOvW9et4O4J7ujsbTVz4yEm943bwbsDY3fBwILouZM/1618939362/sites/default/files/2021-04/tfututr.jpg)
Published on 20/04/2021 | Edited on 20/04/2021
இன்று இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் ஞாயிற்றுக் கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலானது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலானது. இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். விமானம், ரயில் நிலையங்களுக்குச் செல்ல மட்டும் இரவு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இரவு நேர முடக்கம் அமலுக்கு வந்துள்ளது.