Skip to main content

மதுரை அதிமுகவில் புதிய அணி

Published on 30/08/2017 | Edited on 30/08/2017
மதுரை அதிமுகவில் புதிய அணி



அதிமுகவில் அம்மா அணி, புரட்சித் தலைவி அம்மா அணி, தீபா அணி, தினகரன் அணி என பிரிந்து கிடக்கிறது. இவர்கள் எல்லாம் ஒன்னரைக் கோடி தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் என சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால். தொண்டர்களோ எவ்வித முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்கள். என்பது தான் உண்மை. இதற்கிடையே மதுரை சுவர்களில் ஒப்டப்பட்டு இருந்த திருமண வாழ்த்து போஸ்டர் ஒன்றில் எம்.ஜி.ஆர், பசும்பொன் தேவர் பெரிய சைசில் ஜெ படம் போட்டு 52வது வட்ட அதிமுக என்று இருந்தது. 

இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் கேட்டபோது எங்களுக்குத்தெரிந்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் தான் அதன் பிறகு அவரால் அடையாளம் காட்டப்பட்ட புரட்சித் தலைவி அம்மாதான் எங்களுக்கு வழிகாட்டி. அம்மா உயிரோடு இருந்திருந்தால் இப்படி எல்லாம் ஆளாளுக்கு ஆட்டம் போட முடியுமா? அம்மா பெயரை அசிங்கப் படுத்துகிறார்களே? எனவே எங்களுக்கு எந்த அணியும் தேவை இல்லை என்ற முடிவில் தான் இப்படி ஒரு போஸ்டர் அடித்தோம் என்றார்கள் விரக்தியாக. கிட்டத்தட்ட இதே மனநிலைக்கு பெரும்பாலான தொண்டர்கள் வந்து விட்டதாகவே தெரிகிறது.

இத்தனைக்கும் மதுரை மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்களான செல்லூர் ராஜு, உதய குமார் இருவரும் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்த போஸ்டர் அடித்தவர்களும் முக்குலத்தோர் வகுப்பை சேர்ந்தவர்கள் தான். இருப்பினும், இவர்கள் இருவர் படமும் போஸ்டரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் மதுரையில் அதிமுக அணிகள் எண்ணிக்கை இன்னும் அதிகமானாலும் ஆச்சர்யமில்லை என்பது தான் அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.

-ஷாகுல்

சார்ந்த செய்திகள்