
திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல இடங்களில் திருச்சி மாநகர ஆணையர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான பழைய பால்பண்ணை சந்திப்பில் புதிதாக தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.

இது கடந்த ஒரு மாத காலமாக பரிசோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த சிக்னல், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து, நேற்று 04ஆம் தேதி புதிய போக்குவரத்து சிக்னலை முறைப்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மேலும் பொதுமக்கள் சிக்னலை கவனித்து வாகனங்களை ஓட்டுவதற்கும், அவர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கவும், ஒலி பெருக்கி அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.