தமிழ்நாட்டில் 10, 12 ம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் வழக்கமாக காலையில் தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு குளறுபடியாக 10 ம் வகுப்புகளுக்கான மொழிப்பாடங்கள் தேர்வு மதிய நேரத்தில் நடத்தப்பட்டது. அடுத்து 25 ந் தேதி காலை கணக்கு பாடத்திற்கான தேர்வு நடந்தது. இந்த கணக்கு தேர்வு தான் மாணவர்களை காவு வாங்கிக் கொண்டிருப்பதாக பெற்றோர்கள் கொந்தளிக்கிறார்.
வழக்கமான பாடத்திட்டத்தில் பாடம் நடத்தப்பட்டு நீட் தேர்வுக்கு இணையான கேள்விகளை கேட்டதால் மாணவர் முதல் நிமிடமே அதிர்ச்சியானார்கள். நூறு என்று இலக்கு வைத்து சென்ற மாணவர்கள் தேர்ச்சியனால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். பாடம் நடத்திய கணக்கு ஆசரியர்களும் கூட அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சியிலிருந்து மீழ்வதற்குள் சின்னசேலம் மாணவி பூங்குழலி தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது தான் வேதனை. நீ்ட்டுக்கு அனிதா.. பத்தாம் வகுப்புக்கு பூங்குழலி பலி.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மா செ கவிவர்மன் கொந்தளிப்பாக பேசினார்..
10 ம் வகுப்பு வினாத்தாள் தயாரித்த அந்த ஹிட்லர்களிடம் கேட்கிறேன்... 100 மார்க் எடுத்தாலும் எதற்கும் பயன்படப்போவதில்லை.பிஞ்சுகுழந்தைகளை மனரீதியாக இறுக்கமாக்கி, தவிக்கவிட்டு, செய்வதறியாது திகைக்க வைத்து சந்தோசப்படும் ஒருவகை மனநிலைபாதித்த சைக்கோக்களால் உருவாக்கப்பட்ட வினாத்தாள் என்பேன். தங்கள் திறமையை இளம் மாணவர்களின் இதயத்தை காயப்படுத்தி நிரூபித்துள்ள இரக்கமற்றவர்கள். ஏழை கிராமத்து குழந்தைகளின் வாழ்க்கை பின்புலம் அறியாத மேல்தட்டு அதிமேதாவிகள்.
புளியமரத்து பள்ளிக்கூடம், கரும்பலகை, கணக்குவாத்தியார் இல்லாத பள்ளிக்கூடங்களில், நூறுநாள் வேலைபார்த்து, பாத்திரம் தேய்த்து, மூட்டை தூக்கி படிகக்கவைக்கும் அனிதாக்களின் தேசம் இது.
அந்த பிஞ்சுக்குழந்தைகள்.. இத்தனை கடினமான கேள்வித்தாளை பார்த்தவுடன் 5 நிமிடம் அழுதேன்... பிறகு நிறைவில்லாமல் எழுதினேன்... எனச்சொல்லும் போது சுருக்கென்று வலிக்கிறது. கிராமப்புற பள்ளி மாணவர்கள் முகம் இருண்டு போய்கிடக்கிறது. நீட்டுக்கு தங்கை அனிதாவை பலிகொண்டவர்கள் பத்தாம் வகுப்புக்கு பூங்குழலியை பறித்துக் கொண்டார்கள்.
மாணவர்கள் முகத்தில் இருட்டைப் பூசும் கேவலமான அதிமேதாவி ராமானுஜர்கள் என்றார் கடுமையாக.