![fgh](http://image.nakkheeran.in/cdn/farfuture/ygdRDGz4PcHtcL08ycVzX3mQKnwrXbF5rSZgdvmaWyo/1640619129/sites/default/files/inline-images/30_24.jpg)
அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை தலைவராக பணியாற்றி வந்த கே.சீத்தாராமன் பல்கலைக்கழகத்தில் புதிய பதிவாளராக(பொறுப்பு) நியமிக்கப்பட்டார். இவர் திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து இவர் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி செல்வநாராயணன், தொலைதூர கல்வி இயக்குநர் சிங்காரவேலன், பல்கலைக்கழக புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், அனைத்து பிரிவு இயக்குனர்கள், அதிகாரிகள், நிதி அலுவலர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள், ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள், மக்கள் தொடர்பு அலுவலர் இரத்தினசம்பத், துணை வேந்தரின் நேர்முக உதவியாளர் பாக்கியராஜ், பதிவாளர் நேர்முக உதவியாளர் சுந்தரராஜன் உள்ளிட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் புதிய பதிவாளரை சந்தித்து வாழ்த்து கூறினார்கள்.