Skip to main content

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை! 

Published on 12/05/2024 | Edited on 12/05/2024
New record on Tamil Nadu Urban Habitat Development Board 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கடந்த 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக வீட்டுவசதி, குடிசைப்பகுதி மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு போன்ற பல்வேறு திட்டங்களை குடிசைப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த செயல்படுத்தி வருகிறது. இந்த வாரியம் தொடக்கத்தில் சென்னையில் மட்டுமே தனது பணிகளைச் செயல்படுத்திக் கொண்டிருந்தது. இதனையடுத்து கடந்த 1984ஆம் ஆண்டு முதல் தனது பணிகளை தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக நகர்ப்புற பகுதிகளிலும் விரிவாக்கம் செய்தது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்ற உயரிய நோக்கத்தினை கொண்டதாகும். குடிசைப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை நிலைநாட்டவும், குடிசைவாழ் மக்கள் வாழும் இடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்புகள், அடிப்படை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மனைகள், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

New record on Tamil Nadu Urban Habitat Development Board 

இந்நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை படைத்துள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் ரூ. 3 ஆயிரத்து 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 ஆயிரத்து 824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 2 ஆயிரத்து 78 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் 69 ஆயிரத்து 701 புதிய தனி வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்