பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கொண்ட ஜியோவின் பிரத்யேக மொபைல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் 501 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ போன் ‘பேசிக்’ போன் தோற்றத்தில் ஸ்மார்ட்போன் வசதிகளை அளிக்கும் மொபைலாக கருதப்படுகிறது. கடந்தாண்டு தீபாவளி ஒட்டி அறிமுகம் செய்யப்பட்ட இந்த மொபைல், ரூ.1500 வைப்புத் தொகைக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாம் கட்டமாக முன்பதிவு இல்லாமலே நேரடியாக ஜியோ போன் விற்பனையை அந்நிறுவனம் தொடங்கியது. ஜியோ அலுவலகம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் ஜியோ மொபைல் தற்போது விற்பனைக்கு உள்ளது. மேலும், ஸ்மார்ட்போனுக்கு நிகராக ஜியோ மொபைலிலும் கூகுள் அசிஸ்டெண்ட், கூகுள் மேப், யூடியூப் போன்றவை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 முதல் இந்த சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஜியோவின் மழைக்கால ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணி முதல் துவங்கிய இந்த ஆஃபர் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது பழைய மொபைலை கொடுத்து (எந்த கம்பெனியானாலும்) 501 ரூபாய் செலுத்தி ஜியோவின் புதிய மொபைலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.