






Published on 12/04/2021 | Edited on 12/04/2021
தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அரசு சார்பில் முகக் கவசம் அணிய தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து மவுண்ட் ரோடு, அண்ணா சாலையில் முகக் கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், மற்றும் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்தவர்களைக் கண்காணித்து, காவல்துறையினர் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.