Published on 14/07/2021 | Edited on 14/07/2021

புதிய தகவல் தொழில்நுட்ப சட்டவிதிகள் (ஐ.டி.சட்டம்) செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் இன்று (14/07/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற மனுத்தாக்கல் செய்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, "உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை" எனத் தெரிவித்தது. மேலும், வழக்கு தொடர்பாக இரண்டு வாரங்களில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.