Published on 14/02/2022 | Edited on 14/02/2022
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்ட அமைச்சர் ரகுபதி, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இன்று மதியம் 12.30 மணி முதல் அவர் வழக்குகளை விசாரிக்கத் தொடங்குகிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்சீப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.