Published on 25/09/2019 | Edited on 25/09/2019
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி தேனி மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் சேர்ந்தாக சென்னை மாணவர் உதித்சூர்யா மீது ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு நீட் தேர்வு ஆள்மாறாட்டம் புகாரில் மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் திருப்பதி மலை அடிவாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் தேனி வந்தடைந்துள்ளனர். மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை சிபிசிஐடி போலீசார் தற்போது தேனி வந்துள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து உதவி சூர்யா மருத்துவ படிப்பில் சேர்ந்து குறித்து நாளை விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.