Published on 25/04/2018 | Edited on 25/04/2018

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடைவிதித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான தடையை நீக்கியது.
மேலும் வழக்கு முடியும்வரை வாக்கு எண்ணிக்கையே நடத்தக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்குமாறு தமிழக அரசு தாக்கல் செய்த மனுமீது இன்று நடந்த விசாரணையில் மே 3 வரை கூட்டுறவு சங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் தமிழக அசரின் மனுவை தள்ளுபடி செய்தது.