"செப்டம்பர் 12- ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெறும். நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை (13/07/2021) மாலை 05.00 மணி முதல் nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கரோனா விதிகளின் அடிப்படையில் தேர்வர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்படும்" என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும். தமிழக மாணவர்களுக்கான நீட் பயிற்சியும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும். அரசு கைவிட்டுவிட்டது என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காகவே நீட் பயிற்சி அளித்து வருகிறோம். நீட் தொடர்பான வழக்கு நாளை (13/07/2021) விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தமிழக அரசின் தெளிவான முடிவு அதன்பின்னர் அறிவிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு" எனக் கூறினார்.