நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்ய ரூபாய் 15 லட்சம் கமிஷன் தந்தது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடு வழக்கில் சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர் தனுஷ்குமார், தந்தை தேவேந்திரன் கைது செய்யப்பட்டனர். பெங்களுருவில் உள்ள தனியார் பயிற்சி மையம், இடைத்தரகர்கள் மூலம் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பயிற்சி மையம், இடைத்தரகர்களுக்கு ரூபாய் 15 லட்சம் கமிஷன் தந்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்தி தெரியாமலேயே பீகாரில் இந்தியில் நீட் தேர்வு எழுதி மோசடி செய்து தேர்ச்சி பெற்றதால் சிக்கினார்.
ஓசூரை சேர்ந்த மாணவரனா தனுஷ் குமார் 2018- ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே 2018- ஆம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 2,500 மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்ய மருத்துவக்கல்லூரி இயக்குனரகத்திற்கு சிபிசிஐடி பரிந்துரை செய்துள்ளது.