நீட் தேர்வு தமிழகம், புதுச்சேரிக்கு தேவையில்லை -முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டமன்ற அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீஸ் மற்றும் சைபர் கிரைம் மூலம் விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு அந்த புளூவேல் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.
அரியலூர் அனிதா தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையில்லை. புதுச்சேரி அரசு சார்பில் இறந்த அனிதா குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரியில் மாநில மாணவ- மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், புதுச்சேரி மருத்துவ கல்லூரியில் புதிதாக படிக்க வரும் மாணவர்களை ராக்கிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தீபாவளி வரும் நேரத்தில் போலீசார் யாராவது தொழில் அதிபர் மற்றும் பெரிய தனியார் நிறுவனங்களில் தீபாவளி வசூல் செய்தால் சம்பந்தப்பட்ட போலீசார் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இவ்வாறு கூறினார்.
- சுந்தரபாண்டியன்