தமிழக அரசு வெளியிட்டுள்ள 1 மற்றும் 2 ஆம் வகுப்பு புதிய பாடப்புத்தகத்தில் நாட்டுப்பண் பல இடங்களில் பிழைகளுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ள. இந்நிலையில் 1 ஆம் வகுப்பு மற்றும் 2 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ள ஜன கண மன என தொடங்கும் நாட்டுப்பண் பாடல் பல இடங்களில் எழுத்துப்பிழையாக அச்சிடப்பட்டுள்ளது.
'திராவிட உத்கல வங்கா'' என்கிற வரியில் வங்கா என்ற வார்த்தைக்கு பதிலாக பங்கா என அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல் ''உச்சல ஜலதி தரங்கா'' என்கிற வரியில் ஜலதி என்ற வார்த்தைக்கு பதில் சலதி என தவறாக அச்சிடப்பட்டுள்ளது. மேலும் பாடலின் இறுதியில் ''ஜன கண மங்கள தாயக ஐய ஹே'' என்ற வரிக்கு பதிலாக ''ஜன கண மன அதிநாயக ஜய ஹே'' எனும் பாடலின் முதல் வரியே திரும்ப இடம்பெற்றுள்ளது. இப்படி வார்த்தைகள் பிழையுடன் அச்சிடப்பட்டிருப்பது மட்டுமின்றி வரியே பிழையாக இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.