காவிரி நீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வழக்கம் போல் மோடி அரசுக்குச் சாதகமாக வழங்கப்பட்டுள்ளது. பல புள்ளி விவரங்கள், வல்லுநர்கள் கருத்து என அனைத்தும் சேகரிக்கப்பட்டு 2007ல் வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீர் 11ஆண்டுக்குப் பிறகு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு ”மருமகள் இல்லை என்று விரட்டிய பிச்சைகாரை மாமியார் அழைத்து அவள் என்ன சொல்வது நான் சொல்கிறேன் இல்லை” என்று சொல்வது போல உள்ளது.
பெங்களுரின் குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பரிவுகாட்டிய நீதிமன்றத்திற்கு தமிழகத்தில் உள்ள தண்ணீர் பிரச்சனையை ஏன் கண்டுகொள்ளவில்லை. காவிரி டெல்டா பகுதியைப் பாலைவனமாக மாற்ற முயற்சிக்கும் இந்த மோடி அரசு நிலக்கரி, பெட்ரோல், எரிவாயு, உள்ளிட்டவற்றை எடுத்து தமிழகத்தை சுடுகாடாக மாற்ற முயற்சி செய்வதற்கு இந்த தீர்ப்பும் ஒரு உதாரணம் எனக் குற்றம்சாட்டி தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் இந்தத் தீர்ப்புக்கு எந்தப் பதிலும் வழங்காமல் பதவியை காப்பாற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தும் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக ராஜினாமா செய்யுங்கள் என்று மக்கள் அதிகாரத்தினா் சாடியுள்ளனர்.
திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன், ஜீவா, ராஜா, உள்ளிட்ட 42 பேர் கைது செய்திருக்கிறார்கள்.