நாளை மதியம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரிலிருந்து செங்கப்பள்ளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பாஜகவுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை இந்த பொதுக்கூட்ட மேடை அருகியிலே அமைக்கப்பட்ட மற்றொரு மேடையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் ப்ரோகித்தும் கலந்துகொள்கிறார். மேலும் கூடுதல் இணைப்பாக பிரதமர் மோடியும் இந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பாஜகவின் மேடை தமிழக அரசு நிகழ்ச்சி மேடை அருகருகே அமைக்கப்பட்டுள்ளது. முதலில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி பிறகு பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அந்த மேடை அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை காத்திருக்க வைத்துவிட்டு தனது கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து அக்கூட்டம் முடிந்த பிறகு அங்கு காத்திருக்கும் முதல்வர் எடப்பாடியிடம் பிரதமர் மோடி செல்கிறார். பாஜக, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை நெருக்கி உள்ள நிலையில் பிரதமர் மோடியும் முதல்வர் எடப்பாடியும் சந்தித்து கொள்வதும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் அனேகமாக நாளை பிரதமர் மோடியிடம் எடப்பாடி நடத்தும் பேச்சு பைனலாக அமையும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.