Skip to main content

கமல் சர்ச்சை பேச்சு விவகாரம்... ஆதாரங்களை சமர்ப்பிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

கடந்த மூன்று தினங்களுக்கு முன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று அவரக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில் கமல் மீது அவரக்குறிச்சியில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

kamal

 

மேலும் கமல் பேசியது தொடர்பாக இந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணுகுப்தா டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி  நீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அந்த ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரித்த பிறகு கமலுக்கு சம்மன் அனுப்பலாமா இல்லையா என முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 

 

இது தொடர்பாக வீடியோ ஆதாரம் மற்றும் அவர் பிரச்சாரங்களில் இந்துக்களை அவமதிக்கும் விதமாக பேசியது தொடர்பான எழுத்துபூர்வமான ஆதாரங்களை ஆகஸ்ட் 2 ஆம் தேதி சமர்ப்பிக்க இருந்ததாக வழக்கு தொடர்ந்த இந்து சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்