Skip to main content

நாங்குநோி தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநோி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான தோ்தல் இன்று நடைபெற்று வருகிறது.  இதில் நாங்குநோி தொகுதியில் திமுக, காங்கிரஸ், நாம் தமிழா் என அரசியல் கட்சி  வேட்பாளா்களோடு 23 போ் களத்தில் உள்ளனா். அதேபோல் இந்த தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 389 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 748 பெண் வாக்காளா்களும்  மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 3 போ் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 42 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.
 

இதற்காக 299 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 110 வாக்கு சாவடிகள் பதட்டமானதாக கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாங்குநோியில் 23 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் 299 வாக்கு சாவடிகளிலும் 598 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக 1475 போ் தோ்தல் பியில் ஈடுபட உள்ளனா்.

NANGUNERI ASSEMBLY BY ELECTION HIGH SECURE PROTECTION


 

மேலும் பாதுகாப்பு பணியில் 6 கம்பெனி துணை ராணுவ படையினா் மற்றும் 5 ஆயிரம் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம்  வீடியோ பதிவு செய்கிறது தேர்தல் ஆணையம். பதிவான வாக்குகள் வரும் 24- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகிறது. 
 

சார்ந்த செய்திகள்