![nagai](http://image.nakkheeran.in/cdn/farfuture/nQaaMiRxQ9WLsmCo93m9Z4qM7bbnGIyATjp8cmmoz5Y/1548127166/sites/default/files/inline-images/nagai_5.jpg)
உணவு பாதுகாப்புத்துறை சார்பாக நாகையில் நடைபெற்ற உணவு தொடர்பான விழிப்புணர்வு முகாமில் திரளானோர் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் புதிய கடற்கரையில் நடைபெற்ற உணவு தொடர்பான விழிப்புணர்வு முகாமை நாகை சார் ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு சார் ஆட்சியர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதோடு கலப்பட டீ தூள், கலப்பட மிளகாய்தூள், சோம்பு, பட்டை, பருப்பு வகைகள் உள்ளிடவற்றை எப்படி கண்டறிவது, முழுமையான விபரம் இல்லாத அடைக்கப்பட்ட உணவுகளை வாங்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும், அதன் விளக்கங்களும் பொதுமக்களுக்கு செய்துகாட்டினர்.
மேலும் நாகை புதிய பேருந்து நிலையத்தில் உணவை கையாள்பவர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறக்கூடிய விழிப்புணர்வு பிரசுரங்கள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டன. முகாமை கான மாணவர்கள், பொதுமக்கள் வர்த்தகர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.