தனது தந்தையே, தனது காதலியை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்திருந்தாலும், அது நாய் கடித்தது போன்ற விபத்து என்று கூறி ஊர்மக்களின் ஆசீர்வாதத்தோடு அந்த பெண்ணை திருமணம் செய்து கரம்பிடித்து உயர்ந்திருக்கிறார் காதலன் ஒருவர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு நித்தியானந்தம். 50 வயதான அவர் அமமுக பிரமுகராகவும், ஜவுளிக்கடை, அடகு கடை, வட்டி என பல தொழில்களையும் செய்து வருகிறார். அதோடு கடைக்குவரும் பல பெண்களிடம் தகாத முறையில் நடப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவரது மகன் முகேஷ்கண்ணன் ஐடிஐ படிக்கும் போது தன்னுடன் படித்த நாலுவேதபதி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறி இருவரும் நீண்ட காலமாக காதலித்துவருகின்றனர். தற்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இருவரும் ஒன்றாகவே வேலையும் பார்த்துவருகின்றனர்.
இந்த நிலையில் இருவரின் காதலையும் தெரிந்துகொண்ட முகேஷின் தந்தை கருப்பு நித்தியானந்தம் மகனின் காதலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்னோட மகனை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன், அதைப்பற்றி உன்னிடம் பேச வேண்டும் உடனே வீட்டுக்கு நீ மட்டும் தனியா புறப்பட்டுவா," என்று அழைத்திருக்கிறார். இதை நம்பிய அந்த இளம்பெண் 19 ம் தேதி சென்னையிலிருந்து பேருந்தில் கிளம்பியவர் 20 ம் தேதி சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். வருங்கால மாமனார் தன்னை எப்பொழுது வந்து அழைத்துச் செல்வார் என்று காத்திருந்த நிலையில் 27 ம் தேதி காரில் அந்த இளம்பெண் வீட்டிற்கு சென்ற நித்தியானந்தம் அந்தப் பெண்ணை நைசாக பேசி காரில் அழைத்துக்கொண்டு போகிற வழியில் தனக்கு சொந்தமான வீட்டில் அடைத்து அங்கு வைத்திருந்த தாலியை அந்த பெண்ணின் கழுத்தில் கட்டியதோடு இரண்டு நாட்கள் பாலியல் ரீதியாக பல கொடுமைகளை சேர்ந்திருக்கிறார்.
அதோடு அவரிக்காட்டில் உள்ள தனது நண்பன் சக்திவேல், பவுன்ராஜவள்ளி தம்பதியினரின் வீட்டிற்கு தூக்கிச்சென்று அங்குஅடைத்துவைத்து. அந்த பெண்தை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். இந்த செய்தி அங்கிருந்த நித்தியானந்தத்தின் கார் டிரைவர் மூலம் காவல்துறைக்கு தெரிந்து காவல்துறையினர் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவ சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் கொடுத்தனர்.இதற்கிடையில் கருப்பு முருகானந்தத்தையும் தெரியும் சக்திவேல், பவுன்ராஜவள்ளி தம்பதியினரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த தகவல் முகேஷ் கண்ணனுக்கு காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டு முகேஷ் கண்ணன் வந்ததும் நடந்ததை எடுத்துக்கூறினார்கள். அவரோ" இது ஒருவிபத்து. அவர என்னோட அப்பன்னு சொல்லவே கூச்சமா இருக்கு. வழியில் போகும் போது ஒரு நாய் கடித்ததாக நினைத்து இதை நான் மறந்துவிடுகிறேன். நீண்ட நாட்களாக நாங்கள் காதலித்தி வருக்கிறோம், அவளை பற்றி எனக்கு தெரியும், அவளை கைவிடமாட்டேன் என கூறி ஊரார் முன்னிலையில் இரவு அங்குள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.