சமீபகாலமாக தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா, ஆங்கில புத்தாண்டைக்கொண்டும் அளவிற்குகூட கொண்டாடமல் சம்பிரதாய விழாவாக கொண்டாடும் நிலையாகிவருகிறது. இளைய தலைமுறையினர் தமிழர் திருநாளின் அருமை, பெருமைகளை அறியாமலும், அறிய வழிவகை இல்லாமலும் ஆங்கிலக்கல்வி மோகத்தால் மடைமாற்றப்பட்டுவருகின்றனர்.
ஆங்கிலப் புத்தாண்டை ஆடம்பரமாக கொண்டாடும் தமிழ் சமூகமும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் தமிழர்களின் வீரத்தையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக்கொடுக்கும் பொங்கல் விழாவை கொண்டாட மறுக்கும் சூழலில் அதை உடைத்தெறியும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை, கிராமிய மோகம் கலந்த பிரபலங்களை அழைத்து, சுற்றியுள்ள கிராம மக்களோடு மாணவர்களும், ஆசிரியர்களும் பிரமாண்டமாக பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறது விவேகானந்தா மற்றும் வீட்டா வெர்சிட்டி பன்னாட்டு கல்வி குழுமம்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு பகுதியில் அமைந்துள்ளது வீட்டா வெர்சிட்டி பன்னாட்டுப்பள்ளியும், விவேகானந்தா மழலையர் பள்ளியும். அந்த பள்ளியை சுற்றிலும் இயற்கை மனம் கமழும் விவசாயமே பிரதானமாக இருக்கும். அதன் சுற்றியுள்ள கிராமத்து குழந்தைகளும் மற்ற பகுதியை சேர்ந்த கிராமப்புற குழந்தைகளும் நகரத்து குழந்தைகளுக்கு நிகராக படிக்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு குறைந்த கட்டணத்தில் பள்ளியை நடத்தி வருகிறது அந்த பள்ளி நிர்வாகம்.
அந்த பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் பாரம்பரியத்தில் துறைகளில் பிரபலமாகியிருக்கும் பிரபலங்களை அழைத்து பொங்கல் விழாவை மிக விமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நிகழ்ச்சியின் நாயகனாக கிராமிய பாடகர் கானா இளையராஜா வந்திருந்து மாணவர்களோடு பாடி,ஆடி மகிழ்ந்தார்.
தமிழனின் அடையாளமும், பாரம்பரியம் குறையாத வகையில் மொத்தநிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தது பார்ப்பவரை மனமகிழவே செய்தது. பள்ளியின் நுழைவு வாயிலை கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு வளைவுகளாக அமைக்கப்பட்டிருந்தனர். மேடையோ விவசாயமுறையான ஏறுதழுவுதல், நடவு நடுதல், களையெடுத்தல், அறுவடை செய்தல் என இந்தமண்ணின் மகிமையை பறைசாற்றும் விதமாக அமைத்திருந்தனர். மேடைக்கு அருகே பசுமாடு, காளைமாடு, ரேக்ளா வண்டி, கட்டை வண்டி, குதிரை வண்டி, உள்ளிட்டவற்றை அலங்கறித்து நிறுத்தியிருந்தனர். காளையை அடக்குதல், கபடி விளையாடுதல், போன்றவற்றை அலங்கரிக்கப்பட்டு மேடையின் முன்பு வைத்திருந்தனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக பச்சரிசி, நெல், பயறுவகைகள்,என நம்மண்ணில் விளையும் தானியங்களை பறப்பிவைத்து இயற்கைக்கு வணக்கமிட்டு பொங்கல் வைத்து, பானை பொங்கியதும் பொங்கலோ பொங்கள், பொங்களோ பொங்கள் என கூடிநின்று குதுகலமாகினர். பிறகு ஆசிரியைகளும், பெண் குழந்தைகளும் கயிறு இழுத்தல் இசை நாற்காலி, உரிஅடித்தல் என ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை காட்டி கலக்கினர். ஆண்கள் கயிறு இழுத்தல், உறியடித்தல், சிலம்பம் சுழற்றுதல் என விளையாடினர்.சிறப்பு விருந்தினரான பாடகர் ஆந்தக்குடி இளையராஜாவோ கிராமியப்பாடல்களைபாடி மாணவர்களோடு ஆடி மகிழ்வித்தார். ஆங்கில பள்ளியில் இப்படி ஒரு விழாவா என்பதே அப்பகுதியின் மக்களின் பேச்சாக பொங்கல்விழா அமைந்தது.
இது குறித்து பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான ரமேஷீம், அவரது துணைவியாரும் கூறுகையில்," எங்கள்பள்ளி பண்ணாட்டுப்பள்ளியாக இருந்தாலும் தமிழர்களின் பாரம்பரியத்தில் இருந்து ஒருபோதும் மாறிவிடக்கூடாது என்பதை மாணவர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் சொல்லவே இந்த விழாவை நாங்கள் ஆண்டு தோறும் நடத்திவருகிறோம். வரும் காலத்தில் இன்னும் சிறப்பாக இந்தவிழா அமையும். ஒவ்வொரு குழந்தைகளும் தமிழர்களின் உடையான பாவாடை தாவணி வேட்டி சட்டையில் வந்து மகிழ்வித்தது எங்களை இன்னும் ஆர்வமடைய செய்கிறது" என தெரிவித்தார்.