![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/2YSTDXltViur67_Iyu5dNZzdbte9bxKGuItGTrCzNqY/1700998877/sites/default/files/inline-images/a3445.jpg)
பிரபல நடிகை வனிதாவை மர்ம நபர் கொடூரமாக தாக்கிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிக்பாஸ் 7 விமர்சனம் குறித்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பிரபல நடிகை வனிதா காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். காரில் இருந்து இறங்கி சகோதரி சௌமியா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 'ரெட்கார்டா கொடுக்குறீங்க... இதற்கு நீ வேற சப்போர்ட் வேற பண்றியா'' எனக்கேட்டு மர்ம நபர் ஒருவர் அவருடைய முகத்தில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இருட்டான அந்த இடத்தில் எங்கிருந்தோ ஒருவர் வந்து தன்னை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் தன்னுடைய காயமடைந்த முகத்துடன் பதிவு ஒன்றை வனிதா வெளியிட்டுள்ளார். நடிகை வனிதா கொடூரமாக தாக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமக்கு உடனடியாக உதவி செய்த காவல்துறைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உடல்நலம் பெறும் வரை தம்மை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனிதா எக்ஸ் வலைதளத்தில் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.