தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். இதை விமர்சிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ட்வீட் போட்டுள்ளார், அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு?
தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு?
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2018
உணவுப்பொருட்கள் கொண்டுசென்றபோது மக்கள் என்ன கூறினார்கள் என்பதையும் பதிவுசெய்துள்ளார்.
அம்மையப்பன்,அம்மாபேட்டை, கோட்டூர் மக்கள்,கோபத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தபொழுது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம்,எங்களுக்கு உணவு இருக்கிறது, மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்படவைத்தது. இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள்.
அம்மையப்பன்,அம்மாபேட்டை,
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2018
கோட்டூர் மக்கள்,கோபத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தபொழுது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம்,எங்களுக்கு உணவு இருக்கிறது, மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்படவைத்தது. இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள்.