Skip to main content

மாதிரி வாக்கை நீக்க மறந்து விட்டோம் -கலெக்டர் ஷில்பா

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

வாக்குப்பதிவு தினத்தன்று காலையில் வாக்குப்பதிவிற்கு முன்பாக வாக்கு இயந்திரங்களை சோதனை செய்யும் பொருட்டு ஒவ்வொரு வாக்குச் சாவடிகளின் வாக்கு இயந்திரத்தில் 50 மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டு அவைகளை பூத் முகவர்கள் முன்னிலையில் காட்டப்படுவது நடைமுறை. அப்படி செயல்படுத்தும் போது நெல்லை பாராளுமன்றத்தின் பல வாக்குமையங்களில் இயந்திரங்கள் மக்கர் செய்ததை நாம் ஏற்கனவே நக்கீரன் இணையதளத்தில் ஏப்.18 அன்றே வெளிப்படுத்தியிருந்தோம்.

 

vote

 

தற்போது அதுபோன்று பதிவு செய்யப்பட்ட மாதிரி வாக்குகள், ஒன்றிரண்டு வாக்கு மையங்களின் இயந்திரங்களிலிருந்து நீக்கப்படாமலேயே வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இது குறித்து நெல்லை கலெக்டர் ஷில்பா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

 

 

நெல்லை மாவட்டதில வாக்குப் பதிவு முடிந்த அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களான நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மற்றும் தென்காசி குற்றாலம் பராசக்தி கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் மத்திய பாதுகாப்புப் படைகளும், இரண்டாவது அடுக்கில் ஆயுதப் படை போலீசார், 3வது அடுக்கில் மாநில போலீசார் என்று மூன்று அடுக்குப் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. விவிபேட் இயந்திரங்கள் மையங்களில் சிறப்பாக செயல்பட்டன. ஆலங்குளம் தொகுதியில் மாயமான் குறிச்சி வாக்குச்சாவடி பூத் எண் 76ல் மாதிரி வாக்குப் பதிவின் போது பதிவான வாக்குகளைக் க்ளியர் செய்யாமல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதாகப் புகார் வந்தது. அதே சமயம் விவிபேட் எந்திரத்தில் பதிவான மாதிரி வாக்குப்பதிவு வாக்குகள் கட்டுப்போட்டு வைக்கப்பட்டுள்ளன.

 

 

வாக்கு எண்ணிக்கையின் போது இந்த விஷயம் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இது அங்கிருந்த அரசியல் கட்சி பூத் முகவர்களுக்கும் தெரியும். இது தொடர்பாக தலைமை தேர்தல் அலுவலருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக முடிவு எடுக்கும் என்று தெரவித்தார் கலெக்டர். இது குறித்து தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்