Skip to main content

“ஊழல் செய்வதில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர் நம்ம ஊர் அமைச்சர்” - எம்.ஆர். விஜயபாஸ்கர்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

MR Vijayabaskar condemns Minister Senthil Balaji

 

குவாட்டருக்கு 10 ரூபாய், தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை சுட்டிக்காட்டி திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

 

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், “இந்திய துணை கண்டத்தில் பிரசித்தி பெற்ற நகரம் கரூர். தற்போது அது நாறிக் கொண்டிருக்கிறது. கள்ளச் சாராயத்திற்கு பெயர் போன அமைச்சர் இங்கு இருக்கிறார். கரூர் சரக்கு என்றால் தமிழகம் முழுவதும் கிடைக்கிறது. மக்கள் பணி செய்யும் முதலமைச்சர் மஞ்சள் பனியன் அணிந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறார். பெண் அதிகாரியை திமுக பெண் குண்டர் படை தாக்கியதை திராவிட மாடல் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. டிபார்ட்மெண்ட் வாரியாக கொள்ளை அடிப்பதை கற்றுத் தருபவர் இந்த அமைச்சர். முன்னாள் முதல்வரை விஞ்ஞான திருடன் என்பார்கள். இந்த கட்சியில், அதை விட பெரிய திருடன் இருக்கிறார். 

 

அமைச்சரை மாற்றினால், ஆட்சி போய் விடும் என்பதற்காக அமைச்சரை மாற்றாமல் இருக்கிறார் முதல்வர். குவாட்டருக்கு 10 ரூபாய் என பாரில் மட்டும் 100 கோடி கொள்ளை அடிக்கிறார்கள். பாரை குத்தகைக்கு விட்டு அதன் முழு தொகையும் அரசுக்கு வரும். அது கடந்த ஆட்சி. ஆனால், இந்த ஆட்சியில் கரூர் கம்பெனி என்ற பெயரில் ஒப்பந்தத்திற்குப் பார் விடாமல் இவர்கள் 100 கோடி கொள்ளை அடிக்கிறார்கள்.

 

தமிழகம் முழுவதும் 5300 கடைகளுக்கும் பில் போட்டு தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில். ஊழல் செய்வதில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர் நம்ம ஊர் அமைச்சர். போக்குவரத்து துறையில் 38,000 பேருக்கு பணம் பெற்றுக் கொண்டு தகுதியானவருக்கு வேலை கொடுக்கவில்லை. அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. அமைச்சர் தவறு செய்தால் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது கடந்த ஆட்சி காலத்தில் நடந்தது. ஆனால், சிறையில் இருப்பவர்கள் வெளியே விடுபவர் திமுகவினர். சாராயம் ஆறாக ஓடுகிறது தமிழகத்தில். டி.ஜி.பி சொல்வது பொய்யா, கள்ளச்சாராயம் பிடித்து கொடுத்து வழக்கு போடுவது பொய்யா என்பதை விளக்க வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்