Published on 08/02/2022 | Edited on 08/02/2022
![பகர](http://image.nakkheeran.in/cdn/farfuture/2tTGcVK2p63tjpkciwxWygiskNu_PX_sKNGhXuO00SI/1644326618/sites/default/files/inline-images/roja_5.jpg)
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில் ஆந்திர மாநிலம், நகரி சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ஆர்.கே.ரோஜா சந்தித்து, ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் வழங்குவது உள்ளிட்ட சில கோரிக்கைகள் குறித்துச் சந்தித்துப் பேசினார்.
![கதச](http://image.nakkheeran.in/cdn/farfuture/hVHM6mR9OU-xFCa4idTGFwfel30NC_acxMsPZep6L_k/1644326752/sites/default/files/inline-images/15_34.jpg)
இந்நிலையில் இதுதொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள ரோஜா, "நான் முதல்வரிடம் என்ன கோரிக்கை வைத்துவிட்டு அலுவலகத்தை விட்டு வந்தேனோ அதை அடுத்த சில மணி நேரத்தில் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். மின்னல் வேகம் என்பார்கள், ஆனால் அதைவிட அதிகமான வேகத்தை ஸ்டாலின் வேகம் என்று இனி கூறலாம்" என்று தெரிவித்துள்ளார்.