கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்பொழுது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,755 லிருந்து 1,821 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 94 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 8 முதுநிலை மருத்துவ மாணவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
இன்று ஒரே நாளில் 38 ஆண்களுக்கும், 28 பெண்களுக்கும் கரோனா பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பரிசோதனை மையங்கள் 41 ஆக அதிகரித்துள்ளது. 835 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 52 சதவீதமாக உள்ளது என தெரிவித்தார்.