சாதாரன குடும்ப பிரச்சனை வழக்கு ஒன்றில், தங்களுக்கு சாதகமாகத் தான் நடந்து கொள்ளவேண்டுமென அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்த எஸ்.ஐ. முதற்கொண்டு அனைத்துப் போலீஸாரையும் அதட்டி, மிரட்டிள்ளார் தமிழக வணிகவரித் துறை அமைச்சரான கே.சி வீரமணியின் உதவியாளர் ஒருவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Mins Veeramani.jpg)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் திவ்யலெட்சுமிக்கும், கீழப்பூங்குடியை சேர்ந்த குமரேஷிற்கும் 14/11/18 அன்று திருமணம் நடைப்பெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் சென்னையில் வசிக்க நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனியாக வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று, "தன்னுடைய கணவர் வீட்டார் ரூ.10 லட்சம் வரதட்சனையாக வாங்கி வரவேண்டுமென வற்புறுத்துகின்றனர்." என திவ்யலெட்சுமி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, இருதரப்பினையும் அழைத்து புகாரின் மீதான விசாரணையை தொடங்கியுள்ளது எஸ்.ஐ.ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/po_5.jpg)
இவ்வேளையில், தமிழக வணிகவரித் துறை அமைச்சரான கே.சி வீரமணியின் உதவியாளர் எனக் கூறிக்கொண்டு வசந்தகுமார் என்பவர், " எதுக்கு விசாரணை.? உடனடியாக எப்.ஐ.ஆர். போட்டு உள்ளே தூக்கி வையுங்க.! எஸ்.பிக்கிட்டே பேசியாச்சு.. செய்ய வேண்டுமென்றால் எஸ்.பி.யை பேச சொல்லவா.?" என அதட்டி மிரட்டியதோடு அல்லாமல், "இன்னென்ன பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்யுங்க." என சவுண்ட் விட, மகளிர் காவல் நிலையமே அல்லோகலப்பட, வேறு வழியில்லாமல் அமைச்சரின் உதவியாளர் கூறிய பிரிவுகளிலேய கு.எண்:11/19 - 498 (A), 406, 506 (1) IPC மற்றும் 407 DP Actபடி வழக்கினைப் பயத்தோடு பதிவு செய்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மகளிர் நிலையப் போலீஸாரோ, " மதியத்திலிருந்து இரவு 7 மணி வரை அமைச்சரோட உதவியாளரால் மிரட்டப்பட்டது உண்மை தான்.! இந்த வழக்கினைப் பொறுத்தவரை எப்.ஐ.ஆர்.என்பது நிச்சயம். விசாரித்து தான் பதிவு செய்ய முடியும். அதுக்குள்ளே.! நான் இன்னார் ஆள், எஸ்.பி சாரை பேச சொல்லவா.? என்றால் பயப்படாமல் இருக்க முடியுமா.? வேறு வழியில்லை உடனடியாக வழக்கைப் பதிவு செய்ய வேண்டியதாயிற்று." என்கின்றனர் அவர்கள். புகார்தாரருக்கு அமைச்சரின் உதவியாளர் என்ன உறவுமுறை என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)