அக்டோபா் 21- ஆம் தேதி நடக்கயிருக்கும் நாங்குநோி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் திமுக கூட்டணியில் நாங்குநோியில் காங்கிரசும் விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடுகின்றன. அதேபோல் அதிமுக இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இதில் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் திமுக, காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு ஆதரவு அறிவித்துள்ள நிலையில், பாராளுமன்ற தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிரதான கட்சியான பாஜக நாங்குநோி, விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவா? இல்லையா? என்ற நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காததால் அதிமுகவினா் அதிா்ச்சியில் இருக்கிறாா்கள்.
இந்தநிலையில், இதுகுறித்து பொன். ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, பாராளுமன்ற தோ்தலுக்காக அமைக்கப்பட்ட பாஜக- அதிமுக கூட்டணி இன்னும் தொடருகிறது. இடைத்தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அதிமுக இன்னும் எங்களை அழைக்கவில்லை. அதே போல் பாஜகவினா் யாரும் இதைப்பற்றி அவா்களிடமும் பேசவில்லை. பாஜக தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை தமிழக பாஜக நிறைவேற்றும்.
வேலூா் பாராளுமன்ற தோ்தலில் முஸ்லீம்கள் அதிகம் என்றும் அதே போல் நாங்குநோியில் கிறிஸ்தவா்கள் அதிகம் என்றும் அதுனால பாஜக வை அழைக்கவில்லையென்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே போல் அனைத்து இந்துக்களும் பாஜக வினருக்கு வாக்களிப்பாா்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. கடந்த தோ்தல்களில் முஸ்லீம்களும் கிறிஸ்தவா்களும் பாஜக வினருக்கு வாக்களித்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக தொடருவது போல் பாஜகவும் தொடருகிறது. அதில் அதிமுக அமைச்சா்கள் பாமக தேமுதிக தலைவரை சந்தித்தில் எந்த தவறும் இல்லை என்றாா்.