7 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று தற்போது மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
நேற்றுவரை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் 1550 பேர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாகவும், இன்னும் பல மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றது. 112 பேர் தற்போதுவரை போராட்டத்தில் இருக்கின்றனர். 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் போராட்டம் இல்லாத நிலையில் மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். விழுப்புரம், திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் இன்று பணிக்கு திரும்பி விட்டார்கள். 3127 பேர்தான் தற்போது போராட்டத்தில் உள்ளனர். இன்னும் 2 மணிக்கு இந்த அளவும் குறையும். மக்களுக்கு சிகிச்சை தடைபடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அரசின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பியவர்களுக்கு நன்றி.
என்னிடம் ஒரு புகைப்படம் உள்ளது. திருச்சியில் ரஜீவகாந்தி மருத்துவமனையில் நோயாளிகள் செல்லக்கூடிய பாதையான படிக்கட்டை அடைத்து போராட்டம் நடத்திவருகிறார்கள். அதை தவிர்க்கலாமே அதை விடுத்து அந்த வாயிலை அடைத்து மருத்துவர்கள் சாகும்வரை உண்ணா விரதம் இருப்பேன் என்பது ஏற்புடையது தானா? போராட்ட களம் என்பது மருத்துவமனை வளாகம் அல்ல. உங்கள் கோரிக்கைகளை வைக்கலாம் இந்த அரசு பரிசீலிக்கும். அரசு பேச தயாராக இருக்கிறது. இவ்வளவு பேர் போராட்டத்தில் இருந்தும் நாங்கள் 50 பேருக்குத்தான் பணிமாறுதல் கொடுத்திருக்கிறோம். அந்த இடத்தில் புதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தண்டிப்பது அரசின் நோக்கம் அல்ல என்றார்.