கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் துரும்பூர் வீரமாஞ்சேரி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஏழை மக்கள் வசித்து வருகின்றனர்.
வீராஞ்சேரி பகுதியில் குப்பைமேட்டில் பல நாட்களாக கோழிக் கழிவுகளை ஒரு சிலர் கொட்டி வந்தனர். இதனால் துர்நாற்றம் வீசியதால் அந்த கிராமமக்கள் குப்பைக் கிடங்கை மூடி, கோழி கழிவுகளை கொட்டாமல் கண்காணித்து வருகின்றனர்.
பல நாட்களாக கழிவுகளைத் உண்ட அப்பகுதியில் உள்ள நாய்கள் வெறிபிடித்து, தற்போது மாமிசக் கழிவுகள் கிடைக்காததால், வெறி கொண்டு அலைந்து அப்பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்கள், ஆடுகள், மாடுகள், என கடித்துள்ளது. இதுவரை 11 ஆடுகள் உள்ளிட்டவற்றை ஒரு வார காலமாக கடித்து குதறியுள்ளன.
"இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றும் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வெறி நாய்களுக்குப் பயந்து வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக" அங்குள்ள பொதுமக்கள் கூறியுள்ளனர்.
இன்று வீராஞ்சேரியைச் சேர்ந்த கபிலன் என்ற 7 வயது சிறுவனையும், விஜயகுமார் என்ற 35 வயது இளைஞரையும் வெறிநாய் கடித்ததில் படுகாயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கலங்குகிறார்கள் அந்தகிராம மக்கள், அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கிராம மக்களையும், பள்ளி மாணவர்களையும், முதியவர்களை காப்பாற்ற முயலவேண்டும் என்பதே சமுக ஆர்வளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இது குறித்து கும்பகோணம் சப் கலெக்டரிடம் தகவல் கூறியதும், இன்றே நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.