Published on 20/07/2020 | Edited on 20/07/2020
தமிழகத்தை பொறுத்த வரையில், கரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகின்றது. அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.
சட்டமன்ற உறுப்பினர்களில் முதலில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அடுத்து தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மஸ்தான், கணேசன், செங்குட்டுவன், காந்தி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சிலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மற்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் தங்கமணி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.