Published on 19/10/2021 | Edited on 19/10/2021
கீழடியில் அகழாய்வு நடைபெற்றுவரும் இடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
மதுரை கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்றுவரும் நிலையில், கீழடிக்கு வந்த அமைச்சர் அகழாய்வு குழிக்குள் இறங்கி தொல்லியல் பொருட்களை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ''கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு குழிகள் வழக்கம்போல் மூடாமல் திறந்த நிலையிலேயே பாதுகாக்கப்படும். அனைத்து நாட்களிலும் சுற்றலா பயணிகள் பார்க்கும் வகையில் அகழாய்வு குழிகள் திறந்து வைக்கப்படும். அகழாய்வு குழிகளைத் திறந்து வைப்பது இதுவே முதல்முறை. கீழடி கட்டுமானங்களைப் பார்வைக்கு வைத்து பாதுகாக்க தொழில்நுட்ப வசதிக்காக சென்னை ஐ.ஐ.டி உதவியை நாட உள்ளோம்'' என்றார்.